Categories: Internet Tamil

Adblocker : ஓர் பார்வை

Adblocker : ஓர் பார்வை

தற்போதைய தகவல் தொழிநுட்ப யுகத்தில் அனைவரும் கணனி ஊடாகவோ அல்லது தமது கையடக்க தொலைபேசி ஊடாகவோ அதிக நேர இணைய பாவனையாளர்களாகவே உள்ளனர்.அவர்கள் அனைவரும் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினையாக தற்போழுது இணைய விளம்பரங்கள்(ad-popups) காணப்படுகின்றன.

இவற்றின் மூலம் அநேக தேவையற்ற இணைய விளம்பரங்களை(Online advertisement) காணக்கூடியதாக உள்ளது.அவை போட்டோக்களாகவும்(Photo) தானாக பிலே(Auto play) ஆகும் வீடியோ கோப்புகளாகவும் போப்பப் விண்டோ(Pop-up window) கலக்கவும் உள்ளன.அவற்றில் சில பயனுள்ளதாக இருந்தாலும் பல ஆபாசங்கள் நிறைந்ததாகவும் தேவையற்ற இணையதளங்களுக்கு நம்மை அழைத்து செல்பவையாகவும் இணைய திருட்டுடன் தொடர்புள்ளவையாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான பிரச்சசினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட செயலியே அட் பிளாக்கர்கள்(Ad-blocker) ஆகும்.இவை தற்போழுது நாம் பாவிக்கும் ஒரு சில மொபைல்   பிரௌசர்களில் அவை ஆரம்பத்திலே பதிவிறக்கிம் செய்யப்பட்டு வந்தாலும் பல கணணி பிரௌசர்களில் நாமே பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால்(Install) பண்ண வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றன.அவற்றை நாம் பிரௌசர்களின் எஸ்ட்டென்ஷன்ஸ்களில்(Extensions) தேடுவதன் மூலமாகவும் அல்லது இலகுவாக கூகிள் செய்வதன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இவற்றின் மூலம் நாம் நமது தனிப்பட்ட கோப்புகளை பாதுகாக்கவும் ,தேவையற்ற விளம்பரங்களில் இருந்து தவிர்த்து கொள்ளவும்,சிறந்த மொபைல் மற்றும் லேப்டாப் பேட்டரி பாவனையை பெறவும், சிறந்த இணைய அனுபவத்தை பெற்று கொள்ளவும் உதவுகிறது.

இருந்தும் இவற்றின் மூலம் பூரணமான  பலன்களை பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பெரியளவிலான விளம்பரங்களில் இருந்து பாதுகாப்பு பெற முடிகிறது.

ஏனெனில் தற்போழுது காணப்படும் சில இணையதளங்கள் இந்த அட் ப்ளாக்கர்களை(Ad-blocker) நிறுத்தின்னாலே தமது இணையதளங்களை பார்வையிட முடியும் என கட்டளைகளையும் வழங்குகின்றன.இதனால் இனிவரும் காலங்களில் அட் ப்ளாக்கர்கள்(Ad-blocker) தமது சேவையை தரமுயர்த்த வேண்டிய நிர்பந்தத்தில் காணப்படுகின்றனர்.

2 comments on “Adblocker : ஓர் பார்வை”

Post a comment

  1. Aadhavan wrote on

    Beneficial

    Reply

  2. Rizvi Sharis wrote on

    Ad blocker பற்றிய சிறந்த தகவல்களைப் பெற்றுக் கொண்டேன் தகவலுக்கு நன்றி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.